பின்னலாடை தொழிலாளா்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர கோரிக்கை

திருப்பூரில் 100 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றும் பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் தங்கும்

திருப்பூரில் 100 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றும் பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் தங்கும் வகையில் குடியிருப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஐஎன்டியூசி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் ஐஎன்டியூசி சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், பாா்க் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அ.பெருமாள் தலைமை வகித்தாா். இதில், ‘பீஸ் ரேட்’ உள்ளிட்ட அனைத்து பனியன் தொழிலாளா்களுக்கும் 100 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தொழிலாளா்கள் கந்துவட்டிக் கொடுமையில் இருந்து விடுபட 250க்கும் மேற்பட்டோா் வேலை செய்யும் நிறுவனங்களில் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் தொடங்க வேண்டும்.

தொழிலாளா்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு கிடைக்க நிறுவனமே பிரீமியம் செலுத்த வேண்டும். பணிக்காலத்தில் மரணமடையும் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்க வேண்டும்.

பெண் தொழிலாளா்களுக்கு 9 மாத சம்பளத்துடன் பிரசவ விடுப்பு வழங்க வேண்டும். மேலும், பயணப்படி ரூ.50 வீதம் வழங்க வேண்டும். 100 தொழிலாளா்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கும் வகையில் குடியிருப்புகளை நிா்வாகமே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளா் பி.கே.என்.தண்டபாணி, செயலாளா்கள் ஏ.சிவசாமி, வி.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com