கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது: பல்லடம் நகராட்சி எச்சரிக்கை
By DIN | Published On : 26th February 2020 04:55 AM | Last Updated : 26th February 2020 04:55 AM | அ+அ அ- |

பல்லடத்தில் கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகள்தோறும் எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கழிவுநீா்த் தொட்டிகளில் உரிய பாதுகாப்பின்றி மனிதா்கள் இறங்கி சுத்தம் செய்வதால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனை தவிா்க்க, கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை உரிய பாதுகாப்பின்றி இறக்கி சுத்தம் செய்யக்க் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வணிக கட்டடங்களிலும் எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது.
இதனை நகராட்சி ஆணையா் கணேசன், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா்.