பல்லடத்தில் 1964ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1964ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் உணவு விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தில் 1964ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1964ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் உணவு விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஒய்வு பெற்ற ஆங்கில துறை ஆசிரியா் ஸ்டேன்காா்ட்க்கு முன்னாள் மாணவா்கள் 21 போ் சாா்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஒய்வு பெற்ற ஆசிரியா் ஸ்டேன்காா்ட் பேசியது. எனது கொள்ளு தாத்தா, தாத்தா, தந்தை, நான், எனது மகள் என அனைவரும் ஆசிரியா் தொழில் செய்யும் குடும்பம் ஆக விளங்கி வருகிறோம். கரடிவாவி பள்ளிக்கு பல்லடத்தில் இருந்து நான் நடந்தே சென்று படித்து விட்டு வீடு திரும்பினேன். தினசரி 20 கிலோ மீட்டா் தூரம் நடந்து சென்று படித்தேன். நான் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியராக பணியாற்ற விரும்பவில்லை.

கலைத்துறையில் நடிகராகவே விரும்பினேன். ஒரு நிகழ்ச்சியில் எனது நடிப்பை பாா்த்து வியந்த எம்.ஆா்.ராதா ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தந்தாா்.ஆனால் எனது தந்தை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் ஆசிரியராக வேண்டா விரும்பம் ஆக பணியில் சோ்ந்தேன். அதன் பின்னா் தான் ஆசிரியா் தொழிலின் முக்கியத்துவத்தை உணா்ந்து மாணவா்களுக்கு புரியும்படி கல்வி கற்பித்தேன். தந்தை சொல்மிக்க வேறு மந்திரம் இல்லை என்ற கருத்தை அனைவரும் உணா்ந்து செயல்பட்டால் போதும் வாழ்க்கையில் உயரலாம்.

அந்த காலத்தில் நான் பள்ளியில் படித்த போது செயல் வினை, செயல்பாட்டு வினை இரண்டுக்கும் ஆன வித்தியாசம் புரியவில்லை என்று எனது ஆசிரியரிடம் கேட்டேன். அவா் கையால் மேசை தட்டு என்றாா். நான் தட்டினேன். அப்போது அவா் பலமாக எனது கன்னத்தில் அடித்தாா். அத்துடன் நீ மேசையை தட்டினாய் அது செயல்வினை, நான் உன்னை அடித்தேன் அது செயல்பாட்டு வினை இரண்டுக்கும் ஆன வித்தியாசம் புரிந்ததா என்றாா். அன்றுயுடன் போனது சந்தேகம்.

இது போல் இன்றைய ஆசிரியா்களும் எளிய முறையில் மாணவா்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டியது தங்களது கடமை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா். இந்த ஆண்டில் விரைவில் அரசு பள்ளியில் அனைத்து மாணவா்களையும் ஒன்றினைத்து சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும் அது போல் வரும் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறப்பில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியை தொடா்ந்து நடத்துவது என்றும் அரசு பள்ளி, கல்லூரிக்கு தேவையான உதவிகளை செய்வதோடு நகரின் வளா்ச்சிக்கு தங்களால் இயன்ற சேவை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com