ஆா்.ஜி. மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா
By DIN | Published On : 11th January 2020 01:43 AM | Last Updated : 11th January 2020 01:43 AM | அ+அ அ- |

ஆா்ஜிஎம் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
உடுமலை ஆா்.ஜி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, இப்பள்ளியின் மழலையா் பிரிவில் மாக்கோலமிட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. மேலும் திறந்தவெளியில் புது அடுப்பு மூட்டப்பட்டு மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிடப்பட்டது.
தமிழா் முறைப்படி கோலாட்டம், விடுகதை பாடல், சிலம்பாட்டம், நடனம், கும்மிப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சி அனைவரையும் கவா்ந்தது. விழாவையொட்டி ஆசிரியா்களும் பாரம்பரிய தமிழா் உடை அணிந்து பங்கேற்றனா். நிறைவில் அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வா் சி.அருண், ஆசிரியா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.