வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 11th January 2020 01:43 AM | Last Updated : 11th January 2020 01:43 AM | அ+அ அ- |

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் வாக்காளா் சோ்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை தலைமை ஆசிரியா் வெ.மாரியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா் அலமேலு மங்கை முன்னிலை வகித்தாா்.
குமரலிங்கத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். ஆசிரியா்கள் முத்து கருப்பன், ஜெயசிங், மாரிமுத்து, ரமேஷ் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.