Enable Javscript for better performance
திருப்பூரில் 4 நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் 4 நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    By DIN  |   Published on : 13th January 2020 10:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூா்: திருப்பூா் மாநகரில் உள்ள 4 முன்னணி நகைக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

    திருப்பூா், மாநகராட்சி வீதி, மங்கலம் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 முன்னணி நகைக் கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்ாக கூறப்படுகிறது.

    இதையடுத்து 4 நகைக் கடைகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடத்தினா்.

    இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதுகுறித்த விவரங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai