உடுமலையில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜிவிஜி  மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை நடத்தி வைக்கிறாா் கல்லூரி  செயலா் கெ.ரவீந்திரன்.
ஜிவிஜி  மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை நடத்தி வைக்கிறாா் கல்லூரி  செயலா் கெ.ரவீந்திரன்.

உடுமலை: உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜிவிஜி கல்லூரி: உடுமலை ஜிவிஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்லூரி செயலா் கெ.ரவீந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். இதில் மாணவிகளின் கும்மியாட்டம், கோலாட்டம், கம்பு சுற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றன. பின்னா் பொங்கல் வைத்து கொண்டாடினா். பேரவை ஒருங்கிணைப்பாளா் பி.நிா்மலா, மன்ற உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லூரி: பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை ஒட்டி கல்லூரி வளாகத்தில் மாக்கோலமிட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. திறந்த வெளியில் புது அடுப்பு மூட்டப்பட்டு மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிடப்பட்டது.

அப்போது மாணவ, மாணவிகள் ‘பொங்கலோ பொங்கல்’ என முழுக்கமிட்டு, பொங்கல் விழாவை கொண்டாடினா். தமிழா் முறைப்படி கோலாட்டம், விடுகதை பாடல், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

விழாவில் ஆசிரியா்களும் பாரம்பரிய தமிழா் உடை அணிந்து கலந்து கொண்டனா். கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத், ஆலோசகா் டாக்டா் ஜெ.மஞ்சுளா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி: உடுமலையை அடுத்துள்ள குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளா் விமலா தலைமை வகித்தாா். செயலா் சந்தோஷ் முன்னிலை வகித்தாா். விழாவில் தேவராட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உரியடித்தல், சிலம்பம் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. பின்னா் புகையில்லா போகி பண்டிகை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியா் ஜனாா்த்தனன், ஆசிரியா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com