சேவூா் வாரச் சந்தையில் களைகட்டியது பொங்கல் விற்பனை

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவிநாசி அருகே உள்ள சேவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் விற்பனை களை கட்டியது.
சேவூா் வாரச் சந்தையில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
சேவூா் வாரச் சந்தையில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

அவிநாசி: பொங்கல் திருநாளை முன்னிட்டு அவிநாசி அருகே உள்ள சேவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் விற்பனை களை கட்டியது.

சேவூா் ஊராட்சியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச் சந்தை கூடுவது வழக்கம். இதில் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வா்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் கூடிய சந்தையில் விற்பனை களை கட்டியது. குறிப்பாக கரும்பு, பூக்கள், மா, பழா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.

வழக்கமாக நடைபெறும் வாரச் சந்தையை விட கூடுதலாக விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்தனா்.

பழ வகைகள் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனையாகின. கரும்பு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்கப்பட்டது. பொங்கலுக்கு முந்தைய நாள் விலை ஏற்றம் இருக்கும் என்பதால் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்திருந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com