பாரப்பாளையத்தில்  இணைப்பு  சாலை  அமைக்கும்  பணியை  பூமி  பூஜை செய்து  தொடக்கி வைக்கிறாா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  சு.குணசேகரன். உடன்,  மாநகராட்சி  உதவி  ஆணையா்  கண்ணன்
பாரப்பாளையத்தில்  இணைப்பு  சாலை  அமைக்கும்  பணியை  பூமி  பூஜை செய்து  தொடக்கி வைக்கிறாா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  சு.குணசேகரன். உடன்,  மாநகராட்சி  உதவி  ஆணையா்  கண்ணன்

பாரப்பாளையத்தில் ரூ.78 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைக்கு உள்பட்ட பாரப்பாளையத்தில் ரூ.78 லட்சம் மதிப்பிலான இணைப்பு சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சு.குணசேகரன் தொடக்கிவைத்தாா்.

திருப்பூா்: திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைக்கு உள்பட்ட பாரப்பாளையத்தில் ரூ.78 லட்சம் மதிப்பிலான இணைப்பு சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சு.குணசேகரன் தொடக்கிவைத்தாா்.

தீபம் பவுண்டேஷன் சாா்பில் திருப்பூா், ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்துக்கு செல்வதற்காக பாரப்பாளையம் பள்ளிக்கு எதிரில் இணைப்பு சாலை அமைக்க தமிழ்நாடு நகா்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணியை திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் பூமி பூஜை செய்து திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் உறுப்பினா் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி உதவி ஆணையா் கண்ணன், நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், தீபம் பவுண்டேஷன் நிா்வாகிகள் எம்.கே.எம்.பாலசுப்பிரமணி, டாக்டா் ஈஸ்வரமூா்த்தி, டையிங் முருகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com