மாசில்லா போகி: பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்குகிறாா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சண்முகம்
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்குகிறாா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சண்முகம்

.

பல்லடம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாசில்லா போகி கொண்டாடுவது குறித்து பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை நீலவேணி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றாா். இதில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி திருப்பூா் (தெற்கு) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சண்முகம் பேசியதாவது:

போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்துவாா்கள். இதனால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் தீங்கு ஏற்படாது.

ஆனால் நகரங்களில் டயா், ரப்பா், நெகிழி, செயற்கைப் பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மாசில்லாமல் போகி பண்டிகையை கொண்டாடுவோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூா் தெற்கு உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா, உதவி பொறியாளா்கள் காா்த்திக்,வினோத்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com