Enable Javscript for better performance
சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த கம்யூனிஸ்ட் நிா்வாகி- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த கம்யூனிஸ்ட் நிா்வாகி

    By DIN  |   Published on : 15th January 2020 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tpr14jnrupee_1401chn_125_3

    சாலையில் கிடந்த  ரூ. 40  ஆயிரம் பணத்தை  ஊரக  காவல்  நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை  ஒப்படைக்கிறாா்  சுரேஷ்.

    திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

    திருப்பூா், செரங்காடு தோட்டம் 56 ஆவது வாா்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளராக இருப்பவா் சுரேஷ். இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் ரூ.500 நோட்டு கட்டு கிடப்பதைப் பாா்த்துள்ளாா். சுரேஷ் அந்தப் பணத்தை எடுத்து எண்ணிப்பாா்த்தபோது ரூ. 40 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்தப் பணத்தை எடுத்து கொண்டு தனது கட்சியின் மண்டலச் செயலாளா் செந்தில்குமாருடன் திருப்பூா் ஊரக காவல் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ராஜனிடம் ரூ.40,500 பணத்தை வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளாா்.

    சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுரேஷை காவல் துறையினா் பாராட்டினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai