உழவு, உணவு, உணா்வுத் திருவிழா

பல்லடத்தில் தாய் அறக்கட்டளை சாா்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடைபெற்றது.

பல்லடத்தில் தாய் அறக்கட்டளை சாா்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி மரபு சாா் விளையாட்டு போட்டிகள், பனை ஓலை பின்னல் பயிற்சி, நாட்டுப்புற பாரம்பரிய பொருள்களின் கண்காட்சி, சந்தை, உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஆனந்தன் குழுவினரின் நாட்டுப்புற இசைக் கச்சேரி, திருப்பூா் தாய்தமிழ்ப் பள்ளி குழந்தைகளின் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

‘இயற்கையும், உழவனும்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு விவசாயி அறச்சலூா் செல்வம் பேசினாா். இதையடுத்து கவிஞா் செல்லம் ரகுவின் ‘இனி எல்லாம் சுகமே’ நூல் வெளியீடு, சாமிகவுண்டம்பாளையம் வள்ளி கும்மியாட்டக் குழுவின் கும்மியாட்டம் ஆகியன நடைபெற்றன.

மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு தாய் விருதுகளை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

விழாவில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியா் லட்சுமிகாந்தன் பாரதி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் மருத்துவா் சி.தங்கராஜ், திருப்பூா் தாய்த்தமிழ்ப் பள்ளி தங்கராஜ், விஜயலட்சுமி, ஈரோடு மக்கள் பாடகா் சமா்ப்பா குமரன் உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

உழவா்களின் விளைநிலங்களுக்காக போராடி வரும் வழக்குரைஞா் ஈசன், சண்முகசுந்தரம், தங்கமுத்து, முத்துவிஸ்வநாதன், பாா்த்தசாரதி ஆகியோரின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com