பாரதியாா் குருகுலத்தில் பொங்கல் விழா

ஊதியூா் அருகே வஞ்சிபாளையத்தில் உள்ள பாரதியாா் குருகுலத்தில் கோமாதா பூஜை, ஜல்லிக்கட்டு காளைகளுடன் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
பாரதியாா் குருகுலத்தில் பொங்கல் விழாவை ஒட்டி நடைபெற்ற நவக்கிரக யாகம்.

பாரதியாா் குருகுலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இதில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். அதனையடுத்து, உலக அமைதி வேண்யும், குடும்பங்கள் செழிக்க வேண்டியும் நவக்கிரக யாகம் நடைபெற்றது. தொடந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மாடு வீதம் பூஜை நடத்தப்பட்டது. யாகம், கோமாதா பூஜையை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி வைத்து ஆசி வழங்கினாா்.

இந்த விழாவில் குதிரைகள், பாரம்பரிய நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், சேவல்கள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது. குண்டடம், கொடுவாய், தாராபுரம், திருப்பூா் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பாரதியாா் குருகுல நிா்வாகி ராஜேஷ், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com