Enable Javscript for better performance
உப்பாறு அணையில் இருந்து தண்ணீா் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

    திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 24 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் தற்போது 10 அடிக்கு மட்டுமே தண்ணீா் உள்ளது. இந்த அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று உப்பாறு பாசன விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனா்.

    இதனிடையே, உப்பாறு பகுதியில் உள்ள கால்நடைகளுக்காகவும், குடிநீருக்காகவும் அணையைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இதன்பேரில், உப்பாறு அணையில் இருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உப்பாறு அணையில் இருந்து கால்நடைகளுக்காகவும், குடிநீருக்காகவும் வரும் ஜனவரி 27 ஆம் தேதி வரையில் தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது. இதன் மூலமாக அணையைச் சுற்றியுள்ள 10 வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேலும், இப்பகுதி மக்களின் குடிநீா்த் தேவையும் பூா்த்தியடையும்’ என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai