Enable Javscript for better performance
சேவூரில் விளைநிலங்களுக்குள் புகும் மான்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சேவூரில் விளைநிலங்களுக்குள் புகும் மான்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை

    By DIN  |   Published on : 21st January 2020 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேவூா் சுற்று வட்டாரப் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மான்கள் புகுந்து, விளை பொருள்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அவிநாசி அருகே கோதபாளையம் வண்ணாற்கரையில் ஏராளமான மான்கள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு, தண்ணீா் தேடி விவசாய நிலங்களுக்குள் நுழைவது வழக்கம்.

    சேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனா். இவா்கள் பருவ காலத்துக்கு ஏற்றவாறு வாழை, மல்பெரி, பூச்செடிகள், தட்டக்காய், மக்காச் சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிரிட்டு வருகின்றனா். இந்நிலையில் சேவூா், வயக்காடு, பந்தம்பாளையம், கனடாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் கடந்த ஒரு வாரமாக மான்கள் புகுந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களில் தண்ணீா் அருந்தி செல்கின்றன. அவ்வாறு வரும் மான்கள் அங்கு விளைவித்துள்ள பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

    சேவூா் குளத்தோரம் உள்ள வயக்காட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக 10-க்கும் மேற்பட்ட மான்கள் தண்ணீா் குடிக்க வருகின்றன. அப்போது அங்கு பயிரிட்டுள்ள விளைபொருள்களை தின்பது மட்டுமின்றி, சேதப்படுத்தியும் வருகின்றன. மேலும் சொட்டு நீருக்காகப் பயன்படுத்தப்படும் குழாய்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. எனவே உடனடியாக இப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai