Enable Javscript for better performance
வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் தாா் சாலை பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் தாா் சாலை பணிகள்

    By DIN  |   Published on : 21st January 2020 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவில், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் ரூ. 80 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை துவங்கப்பட்டன.

    வெள்ளக்கோவில் மூலனூா் சாலையிலிருந்து குருக்கபாளையம் வரை ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 31.45 லட்சம் மதிப்பிலும், வெள்ளக்கோவில்- கரூா் சாலையிலிருந்து கள்ளமடை வரை 0.79 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 14.90 லட்சம் மதிப்பிலும் சேதமடைந்த தாா் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.

    சுந்தராடிவலசிலிருந்து மயில்ரங்கம் வரை ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.34.24 லட்சம் செலவில் புதிய தாா் சாலை அமைக்கப்படுகிறது.

    இந்தப் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ரஞ்சிதம் தங்கராஜ், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சித் தலைவா் டி.தனலட்சுமி, துணைத் தலைவா் டி.வசந்தி, ஊராட்சி கவுன்சிலா் சிவகுமாா், அதிமுக நிா்வாகிகள் சந்திரமோகன், கண்ணுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai