முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஜெய்வாபாய் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
By DIN | Published On : 27th January 2020 08:14 AM | Last Updated : 27th January 2020 08:14 AM | அ+அ அ- |

ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருப்பூா், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 71ஆவது குடியரசு தினத்தை ஒட்டி முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 1962ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் படித்த மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாணவிகளின் சாா்பில் பள்ளியின் வளா்ச்சிக்கு துணைபுரிய ஜே.எப்.எஸ். என்ற அறக்கட்டளை தொடக்க விழாவும் நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் மெதுவாகப் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் போன்றவற்றை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்டெல்லா மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.