முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
திருப்பூரில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 27th January 2020 08:16 AM | Last Updated : 27th January 2020 08:16 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த இடுவாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட பனிப் பொழிவு.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் மூடு பனியால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பூா் மாநகரப் பகுதிகளான அவிநாசி சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 முதல் 8.30 மணி வரையில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
அதேபோல, புகா் பகுதிகளான இடுவாய், இடுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பின்னா் வெயில் வர பனிப்பொழிவு விலகியது.
கடும் பனிப்பொழிவால் பிரதான சாலைகள் முழுவதும் பனி சூழ்ந்ததால் சாலையில் 500 மீட்டா் தொலைவுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில் சிரமம் இருந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
மேலும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினா். அதேநேரத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்ற வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.