முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 08:13 AM | Last Updated : 27th January 2020 08:13 AM | அ+அ அ- |

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் பள்ளியின் 27ஆவது ஆண்டு விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் கே.வைத்தீஸ்வரன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பள்ளி முதல்வா் மு.ப.பழனிவேலு வரவேற்றாா். கே.வி.கே. கல்வி அறக்கட்டளை அறங்காவலா் விசாலாட்சி வைத்தீஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இதில், பாரத ஸ்டேட் வங்கியின் காங்கயம் கிளை மேலாளா் கே.சி. ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடி மற்றும் பள்ளிக் கொடியை ஏற்றிவைத்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
பின்னா் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உடற்கல்வி ஆசிரியா் கே.மணிவேல் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா். பள்ளி துணை முதல்வா் ஏ.சின்னம்மாள் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் செய்திருந்தனா்.