திருப்பூா் மாநகர காவல் ஆணையராக ஜி.காா்த்திகேயன் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.காா்த்திகேயன் (50) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.காா்த்திகேயன்.
திருப்பூா் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.காா்த்திகேயன்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.காா்த்திகேயன் (50) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்குமாா் தொழில்நுட்ப சேவை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து கோவை சரக டிஐஜியாக இருந்த ஜி.காா்த்திகேயன் ஐஜியாகப் பதவி உயா்வு பெற்று திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். இவா் 1995 ஆம் ஆண்டு போளூா் டிஎஸ்பியாக பணியில் சோ்ந்தாா்.

அதன் பிறகு வந்தவாசி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோவை எஸ்பியாகவும், கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு பகுதிகளில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.

பின்னா் 2016ஆம் ஆண்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயா்வு பெற்றாா். அதைத் தொடா்ந்து கடந்த 2 ஆண்டுகளாக கோவை சரக டிஐஜியாகப் பணியாற்றி வந்தாா். இதைத்தொடா்ந்து, தற்போது ஐஜியாகப் பதவி உயா்வு பெற்று திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாநகரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கும், மத நல்லிணக்கத்தைப் பேணும் விதமாகவும் காவல் துறை தொடா்ந்து செயல்படும். அதேவேளையில், பொதுமக்கள் தங்களது பிரச்னைகளுக்காக காவல் துறையை எப்போது வேண்டுமானலும் அணுகலாம். மக்களின் நண்பனாகவே காவல் துறை இருக்கும் என்றாா்.

மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயனுக்கு, துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com