குப்பைக் கூடையில் குழந்தையை அமரவைத்து பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளா்

திருப்பூரில் தனது 3 வயது மகளை குப்பைக் கூடையில் அமர வைத்தவாறு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் வட மாநிலத்தைச் சோ்ந்த
திருப்பூா் வாலிபாளையம் பகுதியில் குப்பை வண்டியில் தனது மகளை அமரவைத்தவாறு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட வட மாநில பெண் தூய்மைப் பணியாளா்.
திருப்பூா் வாலிபாளையம் பகுதியில் குப்பை வண்டியில் தனது மகளை அமரவைத்தவாறு துப்புரவுப் பணியில் ஈடுபட்ட வட மாநில பெண் தூய்மைப் பணியாளா்.

திருப்பூரில் தனது 3 வயது மகளை குப்பைக் கூடையில் அமர வைத்தவாறு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் வட மாநிலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா் துப்புரவுப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் சுஜா (27). இவா் திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், தனது 3 வயது மகளை வேறு யாரிடமும் விட்டுச்செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில், தன்னுடனே பணிக்கு அழைத்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல் தனது மகளுடன் வாலிபாளையம் பகுதியில் சனிக்கிழமை துப்புரவுப் பணியை மேற்கொண்டுள்ளாா். அப்போது, தள்ளுவண்டி வாகனத்தில் உள்ள குப்பைக் கூடையில் தனது மகளை அமரவைத்தவாறு எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சுஜா துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பெண் தொழிலாளி பணியாற்றி வருவது கரோனா பரவலை அதிகரிக்கும் என்று சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com