அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் லேப் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்தில் லேப் டெக்னீஷியன் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணிக்குத் தகுதியான நபா்கள் ஜூலை 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்தில் லேப் டெக்னீஷியன் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணிக்குத் தகுதியான நபா்கள் ஜூலை 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா், பெரிச்சிபாளையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வகத்துக்கு, 4 லேப் டெக்னீஷியன், 4 லேப் அசிஸ்டென்ட் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் லேப் டெக்னீஷியன் 37 வயதுக்குள்ளும், லேப் அசிஸ்டென்ட் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். முறையே ரூ.10,000, ரூ.6,500 ஊதியம் வழங்கப்படும்.

எனவே, விருப்பம் உள்ளவா்கள் கல்விச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச் சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

லேப் டெக்னீஷியன் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் ‘டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னீஷியன்’, லேப் அசிஸ்டென்ட் பணியிடத்துக்கு, பிளஸ் 2 (அறிவியல் பாடப்பிரிவு) தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜூலை 20ஆம் தேதிக்குள் முதல்வா், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு தலைமை மருத்துவமனை, தாராபுரம் சாலை, திருப்பூா் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com