இணையவழி செயலி மூலமாக கடன் பெற்ற பெண்ணின் விவரத்தைத் திருடி வாட்ஸ்அப்பில் அவதூறு

திருப்பூரில் இணையவழி செயலிமூலமாக அத்தியாவசியத் தேவைக்கு கடன் பெற்ற பெண்ணின் விவரங்களைத் திருடி வாட்ஸ் அப்குழுவில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுகக்கக்கோரி
இணையவழி செயலி மூலமாக கடன் பெற்ற பெண்ணின் விவரத்தைத் திருடி வாட்ஸ்அப்பில் அவதூறு

திருப்பூரில் இணையவழி செயலிமூலமாக அத்தியாவசியத் தேவைக்கு கடன் பெற்ற பெண்ணின் விவரங்களைத் திருடி வாட்ஸ் அப்குழுவில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுகக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்த வினு என்பவரின் மனைவி மாலதி (33) அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: நான் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இணையவழி செயலி மூலமாக கடந்த மார்ச் மாதம் ரூ.3,500 கடன் பெற விண்ணப்பித்திருந்தேன். இதையடுத்து, இந்த நிறுவனமும், வட்டியைப் பிடித்தம் செய்தது போக மீதிப்பணத்தை எனது வங்கிக் கணக்கில் செலுத்தினர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையில்லாததால் குறிப்பிட்ட நாளில் கடனை செலுத்த முடியவில்லை. 

இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு எண்ணில் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். இந்நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்குத் தெரியாமல் எனது செல்லிடப்பேசியை டிராக் செய்து அதில் எனது புகைப்படம் மற்றும் உறவினர்களின் செல்லிடப்பேசி எண்கள் உள்ள விவரங்களைத் திருடியுள்ளனர். இதன் பிறகு பிராடு மாலதி என்று வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பித்து எனது உறவினர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர். மேலும், எனது அனுமதியில்லாமல் புகைப்படத்தையும் பதிவிட்டு தவறாக சித்தரித்து பொது வெளியில் அவமானப்படுத்தியுள்ளனர். 

ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4ஆவது மண்டல செயலாளர் ஆர்.வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com