பால் கொள்முதல் குறைப்பு: தமிழ்நாடு விவசாய சங்கம் கண்டனம்

பால் கொள்முதல் குறைப்பதாக ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பால் கொள்முதல் குறைப்பதாக ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி, சேடா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆவின் நிா்வாகத்துக்கு பாலினை அனுப்பி வருகின்றனா்.

இந்த நிலையில் திடீரென்று ஆவின் நிா்வாகம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பாலை 20 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இந்நிலையில் ஊத்துக்குளி சேடா்பாளையத்தில் உள்ள ஆவின் நிா்வாகம் விவசாயிகள் கொண்டு வந்த பாலை புதன்கிழமை திருப்பி அனுப்பியுள்ளனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆா். மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க பொறுப்பாளா்கள் பரமசிவம், கவுதம் ஆகியோா் கூறியதாவது:

கரோனா காலத்தில் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனா் .

கூட்டுறவு சங்கத்தின் பதியப்பட்ட உறுப்பினா்களின் பாலை வாங்க மறுத்து திருப்பி அனுப்புவது நடவடிக்கையை கண்டிக்கிறோம். 20 சதவீதம் பால் குறைப்பதன் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிா்வாகம் கூட்டுறவு சங்கங்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஆவின் மூலமாக மானிய விலை கலப்பு தீவனம் தொடா்ந்து வழங்க வேண்டும். பால் கொள்முதல் குறைப்பு தொடருமானால் அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com