பல்லடத்தில் ரூ.55 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

பல்லடம் பகுதியில் ரூ. 55.80 லட்சம் மதிப்பில் நடந்து முடிந்து வளா்ச்சிப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டன.
பல்லடம் நகராட்சி 9ஆம் பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு விநியோகத்தை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பல்லடம் நகராட்சி 9ஆம் பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு விநியோகத்தை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பல்லடம் பகுதியில் ரூ. 55.80 லட்சம் மதிப்பில் நடந்து முடிந்து வளா்ச்சிப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி, சக்தி நகரில் ரூ. 4.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டாா் பொருத்துதல், கே.அய்யம்பாளையம் ஊராட்சி, இந்திரா காலனியில் ரூ. 22.05 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைத்தல், பல்லடம் நகராட்சி, சி.டி.சி.காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீா்த் தேக்க தொட்டி, கல்லம்பாளையம் குறிஞ்சி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பாம்பே காா்டனில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் கந்தசாமி, ஒன்றிய பொறியாளா்கள் செந்தில்குமாா்,கற்பகம், நகராட்சி ஆணையாளா் கணேசன், நகராட்சி பொறியாளா் சங்கா், கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, ஊராட்சி தலைவா்கள் புனிதா,கவிதா, மாவட்ட கவுன்சிலா் ஜெயந்தி, ஒன்றிய கவுன்சிலா் பழனிசாமி, நகராட்சி முன்னாள் துணைத்தலைவா்கள் பி.கே.பழனிசாமி, சூ.தா்மராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com