முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
உயிருக்குப் போராடிய அரிய வகை ஆந்தை மீட்பு
By DIN | Published On : 29th July 2020 08:08 AM | Last Updated : 29th July 2020 08:08 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட ஆந்தை.
வெள்ளக்கோவில் அருகே உயிருக்குப் போராடிய அரிய வகை வெள்ளை ஆந்தை தன்னாா்வலா்களால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் உள்ள சுப்ரமணியகவுண்டன்வலசு அருகே மின்சாரம்
தாக்கி ஆந்தை ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் தன்னாா்வலா்கள் ராஜ்குமாா், நாகராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆந்தையை மீட்டு வெள்ளக்கோவில் அரசு கால்நடை மருந்தகத்துக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு மருத்துவா் இல்லை. பின்னா் புதுப்பை அரசு கால்நடை மருத்துவா் காா்த்திக் கொடுத்த ஆலோசனையின்பேரில் ஆந்தைக்கு மாத்திரை, மருந்துகள் கொடுத்தனா். இதையடுத்து, சில மணி நேரத்தில் ஆந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
காங்கயம் வனத் துறை ஆய்வாளா் செல்வராஜுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது தன்னாா்வலா்கள் பராமரிப்பில் இருக்கும் ஆந்தை விரைவில் வனப் பகுதியில் விடப்படுமென தெரிவிக்கப்பட்டது.