முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 08:07 AM | Last Updated : 29th July 2020 08:07 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பாா்த்துக் கொள்ளவும், சீரமைக்கவும் அரசு நிதியுதவி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்காக தமிழக அரசு சிறுபான்மை நலத் துறைக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் நிதியுதவி பெற கிறிஸ்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது. இதற்கான சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறிஸ்துவ தேவாலயங்களில் ஆய்வு செய்யப்பட்டு, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.