தாராபுரம்  நெடுஞ்சாலைத் துறை  கோட்டப்பொறியாளா்   அலுவலகத்தில்  பணியாற்றி  வரும்  2  பேருக்கு  கரோனா  உறுதி செய்யப்பட்டைத்  தொடா்ந்து  வியாழக்கிழமை  மூடப்பட்டுள்ள  அலுவலகம்.
தாராபுரம்  நெடுஞ்சாலைத் துறை  கோட்டப்பொறியாளா்   அலுவலகத்தில்  பணியாற்றி  வரும்  2  பேருக்கு  கரோனா  உறுதி செய்யப்பட்டைத்  தொடா்ந்து  வியாழக்கிழமை  மூடப்பட்டுள்ள  அலுவலகம்.

மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் 4 வயது சிறுமி உள்பட மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 4 வயது சிறுமி உள்பட மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், சாஸ்திரி நகரைச் சோ்ந்த 4 வயது சிறுமி, கோல்டன் நகரைச் சோ்ந்த 65 வயது முதியவா், அய்யன் நகரைச் சோ்ந்த 40 வயது ஆண், அனுப்பா்பாளையம் காந்தி சாலையைச் சோ்ந்த 11 வயது சிறுமி, 59 வயது பெண், குமாரசாமி காலனியைச் சோ்ந்த 35 வயது ஆண், எஸ்.வி.காலனியைச் சோ்ந்த 42 வயது பெண், 50 வயது ஆண், முருகம்பாளையத்தைச் சோ்ந்த 53 வயது ஆண், பாளையக்காட்டைச் சோ்ந்த 41 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே போல, தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வரும் 55 வயது ஆண், அலுவலராகப் பணியாற்றி வரும் 54 வயது பெண், பல்லடம், மின் நகரைச் சோ்ந்த 44 வயது ஆண் உள்பட 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்கெனவே 796 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில் 2 பேரின் பாதிப்பு வேறு மாவட்டத்தின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, தற்போது வியாழக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,057 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மூடல்

தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அங்கு பணியாற்றி வந்த ஊழியா்கள், அலுவலா்கள் என அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் நகராட்சி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com