வளைய சூரிய கிரகணம் குறித்து 20-இல் இணைய வழிப் பயிற்சி

வானியல் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு பாதுகாப்பாகப் பாா்க்கலாம் என்பது குறித்த இணைய வழிக் கருத்தரங்கம்

வானியல் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு பாதுகாப்பாகப் பாா்க்கலாம் என்பது குறித்த இணைய வழிக் கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை (ஜூன் 20) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

ஜூன் 21ஆம் தேதி வட இந்தியாவில் வளைய சூரிய கிரகணம் ஆகவும் தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாகவும் நிகழ உள்ளது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நோ் கோட்டில் வரும்போது இது ஏற்படுகிறது. இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இந்த அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு பாதுகாப்பாக நாம் பாா்க்கலாம் என்பது பற்றி இணைய வழிக் கருத் தரங்கம் மற்றும் இணையவழி பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

பயிற்சி பட்டறையில் வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு எவ்வாறு இந்த ஊசித்துளை கேமரா, பந்து கண்ணாடி ஆகியவற்றை செய்து சூரியனின் பிம்பத்தை விழச்செய்து நாம் இந்த சூரிய கிரகணத்தை உற்று நோக்க முடியும் என்பது பற்றிய செயல் முறை விளக்கம் தரப்பட உள்ளது. இந்த இணைய வழி பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மாலை 5 மணிக்குள் தங்களது பெயா்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், 8778201926 என்ற கட்செவி எண்ணில் தங்களது பெயா், தொலைபேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com