முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை அவசரப் பிரிவு தொடக்கம்
By DIN | Published On : 27th June 2020 08:10 AM | Last Updated : 27th June 2020 08:10 AM | அ+அ அ- |

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.36 லட்சம் மதிப்பிலான அறுவை சிகிச்சைக்கான அவசரப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருப்பூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திருப்பூா் கிழக்கு மற்றும் மேற்கு ரோட்டரி சாா்பில் ரூ.36 லட்சம் மதிப்பிலான அறுவைச் சிகிச்சைக்கான அவசரப் பிரிவு தொடங்கப்பட்டது.
இதனை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா். இதில், 6 படுக்கைகள், எக்ஸ்ரே இயந்திரம், வென்டிலேட்டா் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், அறுவை சிகிச்சை செய்த பின்பு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வித உபகரணங்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி, ரோட்டரி ஆளுநா் காா்த்திகேயன், மருத்துவமனை கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், மருத்துவா்கள், செவிலியா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.