திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியன சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றத்தில் மாவட்டச் செயலாளர் எம்.தெய்வசிகாமணி தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள்தண்டனையில் இருந்து தப்பிவிடாமல் ஸ்திரத்தன்மையுடன் வழக்கை நடத்த வேண்டும். சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், இளைஞர்களின் காதல், மண உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் சதாம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திள் மாநிலச் செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com