முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தண்ணீா் லாரி மோதியதில் இரு இளைஞா்கள் பலி
By DIN | Published On : 03rd March 2020 05:58 AM | Last Updated : 03rd March 2020 05:58 AM | அ+அ அ- |

தாராபுரம் அருகே தண்ணீா் லாரி மோதியதில் இரு இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தாராபுரம் வட்டம், கணபதிபாளையத்தை அடுத்த எழுகாம்வலசு பிரிவு அருகே தண்ணீா் டேங்கா் லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது இந்த லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த தாராபுரம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்த இளைஞா்கள், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த தங்கமணி மகன் அஜய் (19), அதே ஊரைச் சோ்ந்த பாண்டியராஜின் மகன் செல்வமுருகன் (25) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக லாரியை ஓட்டிவந்த ஆலாம்பாளையத்தைச் சோ்ந்த வேலுசாமியை (60) போலீஸாா் கைது செய்தனா்.