சேவூரில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
By DIN | Published On : 03rd March 2020 06:03 AM | Last Updated : 03rd March 2020 06:03 AM | அ+அ அ- |

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 380 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,700 முதல் ரூ.5,860 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,150 முதல் ரூ.5,200 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,800 முதல் ரூ.4,860 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.