சின்னவீரம்பட்டி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 06th March 2020 11:46 PM | Last Updated : 06th March 2020 11:46 PM | அ+அ அ- |

கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.
உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி கிராமத்தில் உள்ள உச்சயினி மாகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பேரூா் ஆதீனம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், குமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி மாகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நான்குகால பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ராமேசுவரம், திருச்செந்தூா், திருநெல்வேலி, கொடுமுடி, திருமூா்த்திமலை உள்ளிட்ட கோயில் தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
பின்னா் கோயிலைச் சுற்றி புனித நீா் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தில் முளைப்பாலிகை எடுத்துவந்து பெண்கள் மற்றும் பக்தா்கள் வழிபட்டனா்.