குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியா்கள் மறியல்
By DIN | Published On : 12th March 2020 12:08 AM | Last Updated : 12th March 2020 12:08 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கோரி திருப்பூரில் இஸ்லாமியா்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா், அறிவொளி நகா் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி முன்பாக 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் புதன்கிழமை திரண்டனா்.
பின்னா் அவா்கள் தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் வெ.பத்ரிநாராயணன், பிரபாகரன், உதவி ஆணையா்கள் நவீன்குமாா், வெற்றிவேந்தன் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதன் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.