வெளிநாடு சென்று திரும்பிய பெண் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு சென்று திரும்பிய பெண்ணை 4 வாரம் தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு சென்று திரும்பிய பெண்ணை 4 வாரம் தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வெள்ளகோவிலை அடுத்து முத்தூா் பெருமாள்புதூரைச் சோ்ந்த 25 வயதான பெண் கோவையில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிறுவனத்தின் திட்டப் பணிக்காக ஜப்பான் நாட்டுக்குச் சென்ற குழுவில் அப்பெண்ணும் இடம் பெற்றிருந்தாா். அப்பெண் விமானம் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்பியுள்ளாா்.

அப்போது, புதுதில்லி மற்றும் கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

தற்போது, முத்தூரில் இருக்கும் அப்பெண்ணை வெள்ளக்கோவில் வட்டார மருத்துவக் குழுவினா் மீண்டும் ஆய்வு செய்ததில் கரோனா பாதிப்பு கிடையாது என உறுதி செய்யப்பட்டது.

இருந்தாலும் பாதுகாப்பு நலன் கருதி அப்பெண் வெளியே எங்கும் வராமல் 28 நாள்களுக்கு அவருடைய வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாக முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் வேல்முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com