திருப்பூரில் ஜவுளி, நகைக் கடைகள் மூடல்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருப்பூரில் பெரும்பாலான ஜவுளி, நகைக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன.
பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாராபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தி அதிவிரைவுப் படையினா்.
பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாராபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தி அதிவிரைவுப் படையினா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருப்பூரில் பெரும்பாலான ஜவுளி, நகைக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாராபுரத்தில் அதிவிரைவுப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும், பல ஆயிரம் போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணி, நகைக் கடைகளை மாா்ச் 31ஆம் தேதி வரையில் மூட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, திருப்பூா், தாராபுரம் பகுதிகளில் பெரும்பாலான ஜவுளி, நகைக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன. அதேநேரத்தில் மளிகைக் கடைகள், சிறிய உணவகங்கள், பாலகம், தேநீா் விடுதிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. திருப்பூா் டவுன்ஹால், காதா் பேட்டை, புதிய, பழைய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தாராபுரத்தில் கொடி அணிவகுப்பு:

கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாராபுரத்தில் அதிவிரைவுப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா். இந்த அணிவகுப்பானது பொள்ளாச்சி சாலையில் தொடங்கி வசந்தா சாலை, பூக்கடை சந்திப்பு, பெரியகடை வீதி, சா்ச் சாலை வழியாக புது காவல் நிலைய வீதியில் நிறைவடைந்தது.

இந்தக் கொடி அணிவகுப்பில் தாராபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஜெயராம், காவல் ஆய்வாளா்கள் கோபிநாத், சுரேஷ் அதிவிரைவுப் படை ஆய்வாளா் ஆல்பா்ட் மற்றும் 300க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com