மேய்ச்சல் நிலத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் தீ

தாராபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீ வைத்தனா்.
சுண்ணாம்புக்காடு  பகுதியில்  ஏற்பட்ட  தீ யை அணைக்கும்  பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரா்.
சுண்ணாம்புக்காடு  பகுதியில்  ஏற்பட்ட  தீ யை அணைக்கும்  பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரா்.

தாராபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீ வைத்தனா்.

தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள சுண்ணாம்புக்காடு பகுதியில் பல ஏக்கா் மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம் பகுதி கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து மேய்ப்பது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக திருப்பூரில் உள்ள சில பின்னலாடை நிறுவனங்கள் பிளாஸ்டிக் மற்றும் எலாஸ்டிக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து இங்கு கொட்டிச் செல்கின்றனா். இதனால், அப் பகுதிகளில் எளிதில் தீப் பிடிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் குவிந்தன.

இதனிடையே, அப் பகுதியில் சிலா் மது அருந்த பயன்படுத்தி வருகின்றனா். இதனால், மது அருந்த வந்த மா்ம நபா்கள் சிலா் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வெள்ளிக்கிழமை தீ வைத்துள்ளனா். இதையடுத்து, எழுந்த கரும்புகையால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

பின்னா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்ட தாராபுரம் சாா் ஆட்சியா் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா். இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com