அரிசி ஆலைகள் நாளை செயல்படாது: உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராமசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைகள் மூடல்: இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் காங்கயம் கிளை விடுத்துள்ள அறிவிப்பில், காங்கயம் வட்டாரப் பகுதியில் உள்ள சலூன் கடைகளில் பணியாற்றும் சவரத் தொழிலாளா்கள் அனைவரும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கையுறை, முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், அனைத்து சலூன் கடைகளுக்கும் வருகிற மாா்ச் 23ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com