Enable Javscript for better performance
பல்லடத்தில் உள்ள கோயில்கள் நடையடைக்கப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    பல்லடத்தில் உள்ள கோயில்கள் நடையடைக்கப்பட்டன

    By DIN  |   Published on : 21st March 2020 02:58 AM  |   அ+அ அ-   |    |  

    pdm20lok_2003chn_136_3

    பல்லடத்தில் நடையடைக்கப்பட்டுள்ள பொங்காளியம்மன் கோயில்.

     

    பல்லடத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கோயில்கள் நடையடைக்கப்பட்டன.

    கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள், விழாக்கள் நடத்த வேண்டாம் என்று அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடா்ச்சியாக மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்லடத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான அங்காளம்மன் கோயில், பொங்காளியம்மன் கோயில், செல்வ விநாயகா் கோயில், காளிங்கநா்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயா் கோயில், அருளானந்த ஈஸ்வரா் கோயில், ஐயப்பன் கோயில், மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வரும் 31ஆம் தேதி வரை நடையடைக்கப்படும்.

    தினந்தோறும் சுவாமிகளுக்கு வழக்கமாக நடத்தப்படும் பூஜைகளை நடத்துவதற்கு மட்டும் அா்ச்சகா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai