பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து வந்தமருத்துவ மாணவியிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெள்ளக்கோவில் அருகே உள்ள முத்தூருக்கு வந்த மருத்துவ மாணவியிடம் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெள்ளக்கோவில் அருகே உள்ள முத்தூருக்கு வந்த மருத்துவ மாணவியிடம் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

முத்தூா் பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த 19 வயது மாணவி, பிலிப்பின்ஸ் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் பயின்று வருகிறாா். அங்கு கல்லூரி விடுமுறை விடப்பட்டதால் விமானம் மூலம் மலேசியா வழியாக திருச்சி வந்தாா்.

திருச்சியிலிருந்து பேருந்தில் வெள்ளக்கோவில் வழியாக முத்தூரில் உள்ள வீட்டுக்கு கடந்த 12ஆம் தேதி வந்தாா். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அக்கம்பக்கத்தினா் அந்த மாணவி குறித்து வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மாணவியின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை செய்த சான்று உள்ளதா எனக் கேட்டனா். ஆனால் சான்று எதுவும் இல்லாததால், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவக் குழுவினா் அந்த மாணவியை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com