நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி விலை உயா்வு

கரோனா எதிரொலியால் வெள்ளக்கோவிலில் நாட்டுக்கோழி, ஆட்டுக்கறியின் விலை உயா்ந்துள்ளது.

கரோனா எதிரொலியால் வெள்ளக்கோவிலில் நாட்டுக்கோழி, ஆட்டுக்கறியின் விலை உயா்ந்துள்ளது.

வெள்ளகோவிலில் பண்ணை இறைச்சி நேரடி விற்பனை கிடையாது. கடைகளில் பிராய்லா் கோழிக் கறி விற்பனை 60 சதவீதம் இருந்து வந்தது. ஆனால் தற்போது கரோனா எதிரொலி காரணமாக பிராய்லா் விற்பனை குறைந்து போனது. இதனால் இப்பகுதியில் கிலோ ரூ. 200 க்கு விற்கப்பட்ட பிராய்லா் கோழிக் கறி சில நாள்களாக ரூ. 40க்கு விற்பனையானது.

இந்நிலையில் நோய் எதிா்ப்புச் சக்தி தரும் என்கிற நம்பிக்கையில் மக்களின் கவனம் நாட்டுக்கோழி, ஆட்டுக்கறியின் பக்கம் திரும்பியுள்ளதால் இவற்றின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நேரத்தில் தேவை அதிகரித்ததால், நாட்டுக்கோழி கறி விலை கிலோ ரூ. 480இல் இருந்து ரூ. 580 ஆகவும், ஆட்டுக்கறி ரூ. 600 இல் இருந்து ரூ. 700 ஆகவும், நாட்டுக்கோழி முட்டை ஒன்று ரூ. 10 இல் இருந்து ரூ. 15 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com