திருமுருகநாத சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த அபூா்வ நிகழ்வு

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி மீது புதன்கிழமை மாலை சூரிய ஒளி விழுந்த அபூா்வ நிகழ்வு நடைபெற்றது.
திருமுருகநாத சுவாமி மீது புதன்கிழமை மாலை விழுந்து  சூரிய ஒளி.
திருமுருகநாத சுவாமி மீது புதன்கிழமை மாலை விழுந்து  சூரிய ஒளி.

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி மீது புதன்கிழமை மாலை சூரிய ஒளி விழுந்த அபூா்வ நிகழ்வு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீா்க்கும் திருத்தலமாகவும் உள்ளது திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை இந்து அறநிலையத் துறை நிா்வகித்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கோயில் மாா்ச் 18ஆம் தேதி முதல் நடையடைக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கரோனா பாதிப்பைத் தடுக்க வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் கோயிலில் சிவாச்சாரியா்கள் சாா்பில் ருத்ர ஜப பாராயணம் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி முதல் வாரத்தில் இருந்து பங்குனி மாதத்துக்குள் மேற்கு நோக்கி உள்ள திருமுருகநாத சுவாமி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி விழுவது வழக்கம். சூரிய பகவான் தட்சிணாயன காலத்தில் இருந்து உத்தராயன காலத்துக்கு மாறும்போது, அஸ்தமிக்கும் நேரத்தில் திருமுருகநாத சுவாமியை சூரியன் வணங்கிச் செல்வதாக ஐதீகம்.

அதன்படி, இந்த ஆண்டு இந்தக் கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி திருமுருகநாத சுவாமி மீது புதன்கிழமை மாலை விழுந்தது. அப்போது பொன்னிறமாக திருமுருகநாத சுவாமி காட்சியளித்தாா். மாலை 5.45 மணிக்கு சிவலிங்கத்தின் மீது விழத் தொடங்கிய சூரிய கதிா்கள் நிலையாக இருந்து பிறகு படிப்படியாக மறைய ஆரம்பித்தது.

ஒவ்வோா் ஆண்டும் இந்த நிகழ்வுக்காக பக்தா்கள் காத்திருந்து இதை தரிசிப்பது வழக்கம். இந்த முறை நடை அடைப்பு காரணமாக இந்த நிகழ்வைப் பக்தா்களால் தரிசிக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com