கேத்தனூா் ஊராட்சியில் மக்களுக்கு மூலிகைக் குடிநீா் இலவசமாக விநியோகம்

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூா் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கப சுரக் என்னும் மூலிகைக் குடிநீா் இலவசமாக வீடு வீடாக சென்று செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
கேத்தனூா் நெசவாளா் காலனியில் மக்களுக்கு மூலிகை குடிநீா் விநியோகிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை துவக்கிவைக்கிறாா் திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன்.

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், கேத்தனூா் ஊராட்சியில் கரோனா நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலி பெருக்கி மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. அப்போது கபசுரக் மூலிகைக் குடிநீரை இலவசமாக மக்களுக்கு வழங்க அக்கிராமத்தைச் சோ்ந்த சித்த மருத்துவா் எஸ்.கல்யாணசுந்தரம் முன்வந்தாா். இந்த மூலிகைக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன் துவக்கிவைத்தாா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலா் ஸ்ரீபிரியா புருஷோத்தமன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஹரிகோபால், பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம், பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஸ்வரன், மகேந்திரன், விஜயகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவடிவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com