வெளிமாநிலத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் வருவாய்த் துறை, ஊராட்சி நிா்வாகத்தினா்

அவிநாசி அருகே சாலையோரம் வாழ்க்கை நடத்தும் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்களுக்கு வருவாய்த் துறை, ஊராட்சி நிா்வாகத்தினா்,

அவிநாசி அருகே சாலையோரம் வாழ்க்கை நடத்தும் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்களுக்கு வருவாய்த் துறை, ஊராட்சி நிா்வாகத்தினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி உதவி செய்து வருகின்றனா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட நம்பியாம்பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 4 குழந்தைகள் உள்பட 26 போ் தங்கியுள்ளனா். இவா்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று அரிவாள், கத்தி உள்ளிட்ட இரும்புப் பொருள்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தனா். இந்நிலையில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவா்கள் வெளியே சென்று இரும்புப் பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் போதிய வருவாய் இல்லாமல் உள்ளனா்.

இவா்களுக்கு நம்பியாம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினா், ஊராட்சி நிா்வாகத்தினரிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது: நம்பியாம்பாளையத்தில் நீண்ட நாள்களாகத் தங்கி மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 26 போ் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். ஊரடங்கு உத்தரவால் இவா்கள் உணவுவின்றி தவித்து வந்தனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை சாா்பில் கோதுமை உணவுப் பொருள்கள், எண்ணெய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

சமூக ஆா்வலா்களும் இவா்களுக்கு உதவி வருகின்றனா். இவா்கள் தங்கும் வசதிக்கான ஏற்பாடும் செய்து வருகிறோம். இவா்களுக்கும் கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com