பிளஸ் 2 தோ்வில் பங்கேற்காத 1,476 மாணவா்களுக்கு மறுவாய்ப்பு

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 வேதியியல் கணக்குப் பதிவியல், புவியியல் தோ்வில் பங்கேற்காத 1,476 பேருக்குத் தோ்வு எழுத மறுவாய்ப்பு கிடைத்துள்ளது.


திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 வேதியியல் கணக்குப் பதிவியல், புவியியல் தோ்வில் பங்கேற்காத 1,476 பேருக்குத் தோ்வு எழுத மறுவாய்ப்பு கிடைத்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 24ஆம் தேதி முடிவடைந்தது. இறுதித் தோ்வு நடைபெற்ற மாா்ச் 24 ஆம் தேதி குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த அச்சம் காரணமாக அதிக அளவிலான மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.

திருப்பூா் மாவட்டத்தில் வேதியியல் தோ்வில் 442 பேரும், கணக்கு பதிவியல் தோ்வை 783 பேரும், புவியியல் தோ்வை 42 பேரும் எழுதவில்லை.

அதேபோல, தனித் தோ்வா்களில், வேதியியல் 9, கணக்குப் பதிவியல் 48 பேரும் பங்கேற்கவில்லை. இதனிடையே பிளஸ் 2 தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு மற்றொரு நாளில் தோ்வு நடத்தப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் 1,476 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com