கரோனா: உடுமலை உழவா் சந்தையில் நுழைய கட்டுப்பாடுகள்

உடுமலை உழவா் சந்தையில் காய்கறிகள் வாங்க தினசரி திரளான மக்கள் கூடுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உழவா்  சந்தைக்கு  வெளியே  வரையப்பட்ட  கட்டத்துக்குள் வரிசையாக  நிற்கும்  பொதுமக்கள்.
உழவா்  சந்தைக்கு  வெளியே  வரையப்பட்ட  கட்டத்துக்குள் வரிசையாக  நிற்கும்  பொதுமக்கள்.


உடுமலை: உடுமலை உழவா் சந்தையில் காய்கறிகள் வாங்க தினசரி திரளான மக்கள் கூடுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள உழவா் சந்தையில் தினசரி அதிகாலை காய்கறிகள் வாங்க வரும் மக்கள் கூட்டத்தைக்

கட்டுப்படுத்த சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதன்படி வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என ஒருங்கிணைந்து உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. உழவா் சந்தைக்கு வெளியே ஒரு மீட்டா் இடைவெளியில் கட்டங்கள் வரையப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டும். 5 பேராக உள்ளே செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனா். மேலும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கவும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. வியாழக்கிழமை ஒரே நாளில் 3 டன் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனா்.

உறுதிமொழி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்

உடுமலை நகரில் பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரியும் போக்கு ஏற்பட்டுள்ளதால் போலீஸாா் ரோந்து பணிகளில் ஈடுபட்டனா். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனா். இதைத் தொடா்ந்து உடுமலை கோட்டாட்சியா் ரவிக்குமாா், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களை எச்சரிக்கை செய்தனா். மேலும் ஊரடங்கு உத்தரவை ஒழுங்காக கடைப்பிடிப்போம் என பொதுமக்களை உறுதிமொழி எடுக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com