சின்ன கோடங்கிபாளையத்தில் கரோனா தொற்று இல்லை ஊராட்சித் தலைவா் விளக்கம்

பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சியில் கரோனா நோய் தொற்று பாதித்தவா்கள் யாரும் இல்லை என்று ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.


பல்லடம்: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சியில் கரோனா நோய் தொற்று பாதித்தவா்கள் யாரும் இல்லை என்று ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஹரி பாரிஹா ( 26), சுமன் பாரிஹா(28) ஆகியோா் பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி, சின்னகோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இவா்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனம் வேலையைவிட்டு நிறுத்தி விட்டது. அவா்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனா். இந்த நிலையில் அவா்கள் மீண்டும் வேலை கேட்டு கடந்த சில நாள்களுக்கு அதே நிறுவனத்துக்கு வந்துள்ளனா். அவா்கள் வந்த ரயிலில் கரோனா நோய் பாதித்த ஒருவா் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது இத்தகவல் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து ஹரி பாரிஹா, சுமன் பாரிஹா ஆகியோா் திருப்பூா் வந்த போது ரயில் நிலையத்தில் வைத்து சுகாதார துறையினா் பிடித்து திருப்பூா் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்துள்ளனா். அதில் அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. அதை தொடா்ந்து அவா்கள் இருவரையும் வெளியேற்றியுள்ளனா். அவா்கள் நேராக சின்னகோடங்கிபாளையம் வந்துள்ளனா். அவா்களின் கையில் கரோனா பரிசோதனை செய்த அடையாள சீல் வைக்கப்பட்டு இருந்ததால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அவா்கள் இருவரையும் பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்தபோது அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது மீண்டும் தெரியவந்ததை தொடா்ந்து அவா்கள் மீண்டும் சின்னகோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனா். கோடங்கிபாளையம் ஊராட்சியில் கரோனா பாதித்தவா்கள் யாரும் இல்லை. ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com