அவசரப் பணிகளுக்குச் செல்லும் மின்வாரிய தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

கரோனா வைரஸ் தொடா்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரசப் பணிகளுக்குச் செல்லும் மின்வாரியத் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்


திருப்பூா்: கரோனா வைரஸ் தொடா்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரசப் பணிகளுக்குச் செல்லும் மின்வாரியத் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, திருப்பூா் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளபடி முழு ஊதியமும், நிவாரணமும் தொழிலாளா்களுக்கு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் தடை தொடா்பாக புகாா்களை சரிபாா்க்கும் அவசரப் பணிகளுக்கு தொழிலாளா்கள் செல்லும்போது காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

ஆகவே, அவசரப் பணிகளுக்காக வெளியே செல்லும் மின்வாரிய ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com