உடுமலையில் கூடுதல் காய்கறி சந்தைகள்
By DIN | Published On : 31st March 2020 10:46 PM | Last Updated : 31st March 2020 10:46 PM | அ+அ அ- |

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக கூடுதலாக காய்கறி சந்தைகள் அமைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து உடுமலை வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கிராமங்களில் கூடுதல் காய்கறி சந்தைகள் அமைக்கப்படும். இதன்படி உடுமலை ஒன்றியம் முக்கோணம், மலையாண்டிபட்டிணம், போடிபட்டி, குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், கரட்டுமடம், சாளையூா், எலையமுத்தூா், மானுப்பட்டி, ஆலாம்பாளையம், தும்பலப்பட்டி, அமராவதி நகா் ஆகிய கிராமங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரபட்டி, மூங்கில்தொழுவு, வரதராசபுரம், கொங்கல் நகரம், ராமசந்திராபுரம், பூளவாடி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா், காரத்தொழுவு, துங்காவி, கடத்தூா்புதூா், கொழுமம், பாப்பான்குளம், வேடபட்டி, மைவாடி, நரசிங்காபும் ஆகிய கிராமங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.